
மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களை தற்காலிகமாக நகர்த்துவதற்கு 3,000-4,000 வீடுகளை கட்ட தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
"நான் சில நிவாரண முகாம்களுக்குச் சென்றேன். அங்கு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசாங்கம் சிறந்த வகையில் உதவ முயற்சிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ரெடிமேட் வீடுகளை மாநில அரசு கட்டித்தர உள்ளது. நாடாளுமன்றத்தில் தீர்வு கண்ட பிறகு, அவர்களை அவர்களது சொந்த வீட்டுக்கு மாற்ற வேண்டும். சுமார் 3,000-4,000 தற்காலிக வீடுகள் கட்டப்படும்" என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கிட்ஸ்
இரண்டு மாதங்களில் மக்கள் தற்காலிக வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள்
"இரண்டு மாதங்களுக்குள் நிவாரண முகாம்களில் உள்ளவர்களை தற்காலிக வீடுகளுக்கு மாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை தவிர 33 பழங்குடியின மக்களும் அம்மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மெய்த்தே சமூகத்தையும் ST பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியை கடந்த மே 3ஆம் தேதி நடத்தினர்.
இதனை அடுத்து, ஒரு பெரும் இனக் கலவரம் அம்மாநிலத்தில் வெடித்தது.
இப்போது வரை தொடரும் இந்த வன்முறையால் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.