Page Loader
ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும் 
ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்

ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும் 

எழுதியவர் Nivetha P
Apr 13, 2023
08:09 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2019ம்ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர்மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 30நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றும் சூரத் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 4ம்தேதி இவர் சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் தன்னை குற்றவாளி என்றும், அறிவிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்திவைக்க கோரி முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணையினை இன்று(ஏப்ரல்.,13) நடத்திய நீதிபதி இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இதன் தீர்ப்பினை வரும் 20ம்தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post