தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு(ஜி.ஐ) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்து, தமிழ்நாடு மாநில அளவில் 2வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 புவிசார் குறியீடுகளை பெற்று முதல் இடத்திலுள்ள நிலையில், கேரளா 36 தயாரிப்புகள் கொண்டு 3ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. தமிழில் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் என்று கூறப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி ஓர் அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்திரிக்காய் வகையை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும்.
செடியின் அனைத்து பகுதிகளிலும் முட்களை கொண்ட முள்ளந்தண்டு கத்தரி
சராசரியாக 40 கிராம் எடைகொண்ட இந்த வகை கத்தரிக்காய் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சூழலில் சுமார் 8 நாட்களும் இருக்கும். இதில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற கத்தரி வகைகளை விட இது மிக சுவையாக இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்க கூடிய சக்தி இதற்கு உண்டு, செடியின் அனைத்து பகுதிகளில் முட்கள் இருப்பதால் இந்த செடி தனித்துவமாக அடையாளம் காணப்படும். இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் குண்டு மிளகாய் தமிழில் 'கொழுப்பு' 'உருண்டை' என்று பொருள்பட கூடும். இது கேபிசுமன்னம் இனத்தை சேர்ந்ததாகும். தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான இந்த குண்டு மிளகாய் கருமையான, பளபளப்பான மற்றும் அடர்த்தியானத்தோலை கொண்டதாகும்.