
வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது
செய்தி முன்னோட்டம்
கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என்று கூறப்படும் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினத்திலுள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டும் இந்த திருவிழா இன்று(ஆகஸ்ட்.,29) மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்குசந்தை டேவிட் தன்ராஜ், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் உள்ளிட்டோர் இந்த கொடியினை புனிதம் செய்துள்ளனர்.
அதனையடுத்து ஊர்வலம் நடத்தப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவானது அடுத்த 10 நாட்கள் நடைபெறும் என்னும் நிலையில், கடைசி நாளான செப்டம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி வந்த பின்னர், கொடியிறக்கம் செய்யப்பட்டு இத்திருவிழா நிறைவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கொடியேற்ற திருவிழா
#Watch | நாகை வேளாங்கண்ணி மாதா தேவாலயம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
— Sun News (@sunnewstamil) August 29, 2023
கொடியேற்ற நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகையில் குவிந்துள்ளனர்#SunNews | #Nagapattinam | #Velankanni pic.twitter.com/szosOon8np