வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை
தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்து தமிழகத்தில் குறைந்துள்ளது. அதன்காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.90 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது. அதுவே, சில்லறை விற்பனை கடைகளில் கிலோவிற்கு ரூ. 110 ற்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் பெரியவெங்காயம் கிலோ ஒன்றிற்கு ரூ.60 என விற்பனையாகிறது. சில மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தக்காளியும் தற்போது, கிலோ ஒன்றிற்கு ரூ.60 என விற்பனையாகிறது.