கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் மற்றும் இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதனால், தமிழக அரசு, கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்க ஏற்பாடு செய்தது நினைவிருக்கலாம். பருவமழையின் தாக்கம் சற்று குறைய தொடங்கியதும், தக்காளியின் விலை குறைந்தது. கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும் அளவிற்கு விலை குறைந்து விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை மீண்டும் ஏற்றம் காண துவங்கியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது