Loading...
விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்லலாமா? வாரணாசி விமான நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவமும் மத்திய அரசின் கடும் விதிகளும்
விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்லலாமா? வாரணாசி விமான நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவமும் மத்திய அரசின் கடும் விதிகளும்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2026
03:41 pm

செய்தி முன்னோட்டம்

வாரணாசியில் இருந்து மும்பை நோக்கி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணியின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாகத் தோட்டா பாய்ந்து இரு பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் உரிய உரிமம் மற்றும் ஆவணங்களுடன் துப்பாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதற்கு சில கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பயணிகள் பின்பற்ற வேண்டும்.

தடை

கை பைகளில் துப்பாக்கி கொண்டு செல்லக் கடுமையான தடை

விமானத்தில் பயணிக்கும் நபர்கள் தங்களின் கை பைகளில் அல்லது தங்களின் உடையில் வைத்துக்கொண்டு துப்பாக்கியையோ அல்லது தோட்டாங்களையோ எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அனைத்தையும் பதிவு செய்யப்பட்ட செக்-இன் பைகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

பயணிகள் தங்களின் துப்பாக்கி பற்றிய விவரங்களை விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னரே பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாய்மொழியாகவும் மற்றும் எழுத்துப்பூர்வமாகவும் கட்டாயம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள்

துப்பாக்கியைக் கொண்டு செல்லும் பயணி, இந்திய உள்துறை அமைச்சகம் அல்லது மாநிலக் காவல்துறையினரால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அசல் துப்பாக்கி உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

அந்த உரிமம் பயணம் தொடங்கும் இடம், செல்லும் இடம் மற்றும் இடைப்பட்ட பகுதிகள் அனைத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும் பயணிகள் தங்களின் அசல் அடையாள அட்டையை சமர்ப்பித்து, துப்பாக்கியின் வரிசை எண்ணை அதிகாரிகளின் சரிபார்ப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்பு அனுமதி கடிதங்கள் அவசியமாகும்.

ADVERTISEMENT

கட்டுப்பாடுகள்

தோட்டாக்கள் மற்றும் பேக்கிங் செய்வதற்கான கட்டுப்பாடுகள்

துப்பாக்கியில் இருந்து அனைத்துத் தோட்டாக்களையும் அகற்றிவிட்டு காலியான நிலையில் மட்டுமே பைகளில் வைக்க வேண்டும்.

துப்பாக்கி தனியாகவும், தோட்டாக்கள் தனியாகவும் மிகவும் பாதுகாப்பான பெட்டிகளில் அடைக்கப்பட வேண்டும்.

ஒரு பயணி அதிகபட்சமாக 5 கிலோ எடையுள்ள தோட்டாக்களை மட்டுமே விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும், இந்த சேவையை வழங்குவதற்காக உள்நாட்டு விமான நிறுவனங்கள் பயணிகளிடம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தனிக் கட்டணமாக வசூலிக்கின்றன.

ADVERTISEMENT

பாதுகாப்பு

பாதுகாப்பு சோதனை மற்றும் விநியோக முறை

விமான நிலையத்தில் துப்பாக்கிகள் தனிப் பரிசோதனை அறையில் வைத்து முழுமையாக சரிபார்க்கப்பட்டு முத்திரையிடப்படும்.

பின்னர் அவை பயணிகள் நுழைய முடியாத விமானத்தின் சரக்குக் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

பயணம் முடிவடைந்தவுடன், இந்தத் துப்பாக்கிகள் சாதாரணமாக லக்கேஜ் வரும் கன்வேயர் பெல்ட்டில் போடப்படாது.

வருகை முனையத்தில் உள்ள பாதுகாப்புப் பிரிவில் பயணிகளின் அடையாளங்களை மீண்டும் சரிபார்த்த பின்னரே துப்பாக்கி அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும்.

ADVERTISEMENT