
எனது தங்க பேனாவை நந்தினிக்கு பரிசளிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து ட்வீட்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று(மே.,8) வெளியான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி என்னும் மாணவி 600க்கு 600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து தேசியளவில் சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து தச்சு தொழிலாளி மகளான நந்தினி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் இன்று(மே.,9)தனது குடும்பத்தார் மற்றும் பள்ளி தலைமையாசிரியையோடு சென்று வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
மேலும் நந்தினியின் படிப்பு செலவுகளை அரசு ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே மாணவி நந்தினியை பாராட்டி கவிஞர் வைரமுத்து அவர்கள் ட்விட்டரில் ஓர் பதிவிட்டுள்ளார்.
அதில் அண்மையில் நான் பெற்ற தங்க பேனாவை தங்கை நந்தினிக்கு தருகிறேன்.
திண்டுக்கல் வருகிறேன், நேரில் தருகிறேன்.
உனது கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஒரு
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt