பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி!
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது.
யுனெஸ்கோ என்பது ஐ.நா சபையை சேர்ந்த ஒரு அமைப்பு. இந்த அமைப்பு, உலகில் உள்ள பழமை மாறாத நகரங்களையும் சின்னங்களையும் கண்டறிந்து அவற்றை உலகப் பாரம்பரிய நகரங்களாகவும் சின்னங்களாவும் அறிவித்து வருகிறது.
இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் தொன்மையான நகரங்களை யுனெஸ்கோவிற்குப் பரிந்துரைக்கும்.
இந்த வருடம், மோடியின் வாட்நகரையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்கள் இந்திய தொல்லியல் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களை ஆய்வு செய்து, அதன் தொன்மையைக் கணக்கிட்டு, அந்த இடங்களுக்கு தகுதி இருக்கும் பட்சத்தில் அதை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்கும்.
பாரம்பரியம்
பாரம்பரியம் மாறாத இடங்கள்!
பரிந்துரைக்கப்பட்ட மூன்று இடங்களும் பின்வருமாறு:
1. பிரதமரின் சொந்த ஊரான வாட்நகர்(பாரம்பரிய நகரம்)
2. மொதேருா நகர் சூரியக் கோவில்(பாரம்பரிய சின்னம்)
3. திரிபுரா உனகோட்டி நகர் பாறைக் குடைவுக் கோவில்(பாரம்பரிய சின்னம்)
இந்த மூன்று இடங்களும் யுனெஸ்கோவிற்குப் பரிந்துரைக்க்கப்பட்டுள்ளது.
இதோடு சேர்த்து, இந்தியாவில் உள்ள 52 இடங்கள் இதுவரை யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இந்தியாவில் இருக்கும் 6 இடங்கள் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இடம்பெற்றன.
அந்த ஆறு இடங்களும் பின்வருமாறு:
1. சாத்புரா புலிகள் காப்பகம்
2. கர்நாடகா ஹைர் பெனக்கல்
3. வாரணாசி கங்கை கரை
4. நர்மதை பள்ளத்தாக்கு
5. மராட்டிய ராணுவக் கட்டுமானம்,
6. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்கள்