NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்
    உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்படும் திடீர் விரிசல்கள்

    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    05:52 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்திரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் போன்ற நகரங்களில் கோயில், வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரியளவிலான விரிசல்கள் திடீரென ஏற்பட்டுள்ளது.

    இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் பணியினை அம்மாநில அரசு தனி குழுக்களை அமைத்து மேற்கொண்டு வருகிறது.

    இந்த திடீர் விரிசல்கள் குறித்து இஸ்ரோ, ஐஐடி அமைப்புகளுடன் இணைந்து காரணங்களை ஆராய்ந்தும் வருவதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கு அங்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விரிசல் கண்ட கட்டிடங்களை இடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    எனினும், விரிசல் தொடர்ந்து பரவி வருவதால், இயற்கை பேரிடராக கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

    சாலைப்பணிக்கு தடை

    பாதுகாப்பு கருதி தற்காலிகமாக வீரர்கள் வேறு இடத்தில் தங்க வைப்பு

    இது குறித்து, இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் 25 முதல் 28 ராணுவ கட்டிடங்கள் உள்ளன.

    இதிலும் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி தற்காலிகமாக ராணுவ வீரர்கள் வேறு இடத்தில் தங்கியுள்ளார்கள். தேவைப்பட்டால் ஆலி நகரில் நிரந்தரமாக அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், உத்தரகாண்டின் ஜோஷிமத் பைபாஸ் சாலை பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    முன்கள பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதால்,அவர்கள் செயலாற்ற தயாராகவே உள்ளார்கள் என்று தலைமை தளபதி தகவல் அளித்துள்ளார்.

    தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இப்போது, ஆண்களுக்கும் 12 வார பேறுகால விடுப்பு: பைசர் இந்தியா அறிவிப்பு தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடியும் பிரியாணியும்: மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா பகிர்ந்த வேடிக்கை சம்பவம் தொழில்நுட்பம்
    அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்! பிஎஸ்என்எல்
    மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025