பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி
செய்தி முன்னோட்டம்
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட UPSC தேர்வில் 917வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
917வது ரேங்க் எடுப்பதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்கிறீர்களா? அவர் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன் பட்ட கஷ்டங்களை கேட்டால் நீங்களும் அதை பெரும் சாதனை என்றுதான் கூறுவீர்கள்.
26 வயதான சூரஜ் திவாரி, 2017ஆம் ஆண்டு காஜியாபாத்தின் தாத்ரியில் நடந்த ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களையும், வலது கையையும் மற்றும் இடது கையின் இரண்டு விரல்களையும் இழந்தார்.
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், திவாரியின் மூத்த சகோதரர் ராகுல் இறந்துவிட்டார். அதனால், அந்த ஆண்டு திவாரியின் குடும்பத்திற்கு ஒரு விரக்தியான காலமாக இருந்தது.
details
12ஆம் வகுப்பில் ஒருமுறை தோல்வியடைந்தவர் UPSC தேர்வில் வெற்றி
தையல்காரர் மற்றும் இல்லத்தரசியின் மகனான திவாரிக்கு நடந்த இந்த சம்பவங்களால் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டது,
இதனால், அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) தான் படித்து கொண்டிருந்த BSc படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
இருப்பினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு, வலுவான உறுதியுடன் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் பிஏ(ரஷ்ய மொழி) படிக்க தொடங்கினார்.
2020ஆம் ஆண்டில், அவர் அதே பாடத்தில் முதுகலைப் படிக்க ஆரம்பித்தார். மேலும், அதோடு சேர்த்து UPSC தேர்வை முயற்சிக்கத் தொடங்கினார்.
முதல் முயற்சியிலேயே, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், நேர்முகத் தேர்வில் சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இரண்டாவது முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
மேலும், அவர் 12ஆம் வகுப்பில் ஒருமுறை தோல்வியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.