Page Loader
தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
May 11, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு நபர் இன்று தனது முழு குடும்பத்தையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்பூர் மதுராவின் பலாபூர் கிராமத்தில் இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்திகொண்ட நபர் 42 வயதான அனுராக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் அவர் போராடி வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, அனுராக்கின் குடும்பத்தினர் அவரை போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப விரும்பியதால், அனுராக் அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். சம்பவத்தன்று, அவரது குடும்பத்தினர் மறுவாழ்வு மையத்திற்கு அவரை அனுப்புவது குறித்து வலியுறுத்தியதால் சோகமடைந்த அனுராக் தனது குடும்பத்தினரை கொன்றிருக்கிறார்.

இந்தியா 

 அப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு 

தனது தாயார் சாவித்திரியை(65) சுட்டு கொன்ற அனுராக், தனது மனைவி பிரியங்காவை(40) சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவர் தனது மூன்று குழந்தைகளை அவர்களின் வீட்டின் கூரையிலிருந்து தூக்கி எறிந்து, மூன்று பேரையும் கொன்றார். "வழக்கின் அனைத்து அம்சங்களையும் போலீசார் மற்றும் தடயவியல் குழுக்கள் விசாரித்து வருகின்றன. விரிவான விசாரணை முடிந்த பிறகு வழக்கு பதிவு செய்யப்படும்" என்று இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி சக்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக, தடயவியல் குழுக்கள் தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றன. அதே வேளையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுராக்கின் உடல் உட்பட அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.