Page Loader
சென்னை ஐட்ரீம் திரையரங்கில் பழங்குடியினருக்கு டிக்கெட் தர மறுப்பு 
சென்னை ஐட்ரீம் திரையரங்கில் பழங்குடியினருக்கு டிக்கெட் தர மறுப்பு

சென்னை ஐட்ரீம் திரையரங்கில் பழங்குடியினருக்கு டிக்கெட் தர மறுப்பு 

எழுதியவர் Nivetha P
May 01, 2023
07:29 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையின் வடபகுதியியான ராயபுரத்தில் அமைந்துள்ள ஐட்ரீம் திரையரங்கில் 'பொன்னியின் செல்வன்-2'படம் பார்க்க நாடோடி பழங்குடியினர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் 7டிக்கெட் கேட்டுள்ளார்கள், ஆனால் திரையரங்கில் 4 டிக்கெட்கள் தான் உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.100. சீட்டுகள் தனித்தனியாகவுள்ளது என்றுக்கூறி அவர்களுக்கு டிக்கெட் தர மறுத்துள்ளார்கள். இதனால் அந்த பழங்குடியினர் திரையரங்கைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனை கவனித்துக்கொண்டிருந்த அப்பகுதியிலிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவர்களுக்கு பிறகு போய் 7 டிக்கெட் வேண்டும் என்று கேட்டுப்பெற்றுள்ளார். அந்த டிக்கெட்டினை கொண்டுச்சென்று அவர் அந்த பழங்குடியின மக்கள் கையில்கொடுத்து படத்தினைப்பாருங்கள் என்று கூறியுள்ளார். அவருக்கு அவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அந்த திரையரங்க ஊழியர்களிடம் கேட்டபொழுது மவுனமாக இருந்ததாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post