மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ், பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை கிண்டி ராஜபவனில் இன்று(மே.,12) கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனித்தனியாக மொழியினை வைத்து பிரிந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன் பின் நடந்த அரசியல் மாற்றத்தால் நாம் தனித்தனியாக மொழியை வைத்து பிரிந்துள்ளோம். தற்போது மக்கள் மத்தியில் ஒற்றுமை குறைந்து வருகிறது என்று பேசியுள்ளார். மேலும் தனக்கு நேர்ந்தது ஒரு குழந்தை திருமணம் என்று கூறிய அவர், தன் வாழ்வில் தூண்போல தனது மனைவி பக்கபலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் ஆளுநர் பதவிக்கு விரும்பி வரவில்லை - ஆர்.என்.ரவி
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குழந்தை திருமணத்தினை ஆதரிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் எந்த இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டதற்கு, தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மக்கள் மிகவும் அன்பாக பழகுவார்கள். இங்கு இருக்கும் இட்லி, தோசை மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். பின்னர், நான் எனது சிறு வயதில் சரியான சாலை வசதி கூட இல்லாத காலத்தில் 8 கிமீ தூரம் பள்ளிக்கு நடந்தே சென்றேன். நான் ஆளுநர் பதவிக்கு விரும்பி வரவில்லை. இதனை ஒரு கடமையாக கருதி மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.