மத்திய பட்ஜெட் 2024: எதன் விலை உயரும்? எதன் விலை குறையும்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார், பல்வேறு பொருட்களின் விலைகளை பாதிக்கும் கொள்கைகள் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பை மேலும் எளிமைப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமனால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் பல பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி(பிசிடி) குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றின் விளையும் குறையும். மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு BCD யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன்களின் விலை குறையும்
சுங்க வரி 15%குறைக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன்கள் மற்றும் மொபைல் பாகங்களின் விலை குறையும். மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை இந்த அறிவிப்புகளால் மகிழ்ச்சியடைந்துள்ளது. 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. கூடுதலாக, ஃபெரோ நிக்கல் மற்றும் பிலிஸ்ட்டர் தாமிரம் ஆகியவைக்கு BCD இலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளன. சோலார் பேனல்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உபயோகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான சுங்க வரியை 10% முதல் 15% வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்தது. எனவே, அவற்றின் விலை உயரும். கூடுதலாக, சுங்க வரி உயர்த்தப்படுவதால் பிளாஸ்டிக் பொருட்கள் விலையும் உயரும்.