ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை: இங்கிலாந்து ரவுடியை வலை வீசி தேடும் போலீசார்
இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவர் நஃபே சிங் ரதியின் கொலைக்குப் பின்னால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங்கில், தலைவர் நஃபே சிங் ரதியின் காரை எதிர்பாராதவிதமாக தடுத்து நிறுத்திய i20யில் வந்த ஒரு மர்ம கும்பல், அவரை சுட்டு கொன்றது. 5 பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். 66 வயதான தலைவர் நஃபே சிங் ரதி மற்றும் அவரது ஒரு உதவியாளர் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து வேகமாக தப்பிச் சென்ற i20 காருக்கு போலீசார் வலை வீச்சு
ரதி சென்ற வாகனத்தை ஓட்டி வந்த ரதியின் மருமகனின் உயிரைக் காப்பாற்றியவர்கள், சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து வேகமாக தப்பிச் சென்ற i20 காரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான எஃப்ஐஆரில் வீரேந்திர ரதி, சந்தீப் ரதி மற்றும் ராஜ்பால் ஷர்மா ஆகிய மூன்று புதிய நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 சந்தேக நபர்களின் பெயர் அதில் உள்ளது. முன்னாள் பாஜக எம்எல்ஏ நரேஷ் கௌஷிக் உட்பட 10 சந்தேக நபர்கள் அடையாளம் தெரிந்த நபர்களாகவும், ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபர்களாகவும் பதிவு செய்யப்பட்டுன்னர்.