LOADING...
பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்
நடிகையின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் pc: இந்தியா டுடே

பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2025
07:35 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் புதன்கிழமை போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரவீந்திரன் என்ற கல்லு மற்றும் அருண் என அடையாளம் காணப்பட்டவர்கள், ரோஹித் கோதாரா-கோல்டி பிரார் கும்பலின் உறுப்பினர்கள் மற்றும் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் தொடர் குற்றவாளிகள். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட அதே மோட்டார் சைக்கிளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

என்கவுண்டர்

என்கவுண்டர் விவரங்கள் 

டெல்லி காவல்துறை, உத்தரபிரதேச சிறப்புப் படை (STF) மற்றும் ஹரியானா சிறப்புப் படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் என்கவுன்ட்டர் நடந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். இந்த மோதலின் போது நான்கு போலீசாரும் காயமடைந்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, பதானியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்றது. பதானி குடும்பத்தினர் துறவிகள் பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோருக்கு எதிரான கருத்துக்களால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர். தாக்குதல் நடத்தியவர்கள் திஷா பதானியின் தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜெகதீஷ் பதானியை குறிவைத்து தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.