பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு: திமுக ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டதா?
செய்தி முன்னோட்டம்
இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக ஆட்சியில் 2025-26 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு செலவிடப்பட்ட தொகையை விட தவெக அரசில் தற்போது குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டை விட, சுமார் ரூ.2,176 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட்டே பள்ளிக் கல்வித் துறைக்கு உண்மையான நிதி உயர்வைத் தந்துள்ளது" எனத்தெரிவித்துள்ளார்.
பதிவு
அமைச்சரின் பதிவு
"2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. ஆனால், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பாக வரை உண்மையாகச் செலவிடப்பட்ட தொகை ரூ.42,351 கோடி மட்டுமே. இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத சூழலில், பல ஊதிய வரம்புகளையும் செலவினங்களையும் மிகைப்படுத்தி மதிப்பிட்டு, திமுக தனது கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி என அறிவித்தது".
"அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் ரூ.6,003 கோடி காரணமின்றி உயர்த்தப்பட்டது. இந்த உயர்வுக்கு பின்னால் தவறான கணக்கீடுகளும் தேவையற்ற நிதி உயர்வுகளுமே இருந்தன."
தற்போதைய பட்ஜெட்
தவெக அரசின் உண்மையான நிதி ஒதுக்கீடு
"தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்ததும் அத்தகைய தவறான கணக்கீடுகள் முறையாகச் சரி செய்யப்பட்டு, காரணமற்ற நிதி உயர்வுகள் குறைக்கப்பட்டன. அதனடிப்படையில், 2025-26 திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைக்குச் செலவிடப்பட்ட தொகையை விடத் தற்போது சுமார் ரூ.2,176 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது".
"இது குறித்து நிதித்துறை செயலாளரும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். தவெக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ரூ.44,527 கோடியை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி திறம்பட கையாண்டு, இதன் முழுப் பலன்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்குச் சென்று சேரத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும்".
"இந்த உண்மையான கூடுதல் நிதி ஒதுக்கீடு, பள்ளிக் கல்வித் துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
— Rajmohan (@imrajmohan) August 5, 2026
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய… pic.twitter.com/VDcjutpXo9