Page Loader
அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
இந்த சந்திப்பை TVK பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது

அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2025
07:12 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அரசியல் களம் பரபரப்பாக மாறிவருகிறது, மற்றும் தமிழகம் முழுவதும் தேர்தல் முன் பணிகள் தீவிரமடைந்துள்ளன என்பதை இந்த சந்திப்பு உறுதி செய்கிறது. இந்த சந்திப்பை நடிகரின் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாகவும், அவர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணி, தேர்தல் பிரசாரம் மற்றும் திட்டங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் உள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

2026 தேர்தல் களம்

2026 சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்குகின்றன

அ.தி.மு.க. வலுவான கூட்டணி உருவாக்குவதாக கூறி வருகிறது. 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்கிறது. இந்தக் கட்சியின் தேர்தல் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விஜய், தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணிக்குள் த.வெ.க. கட்சியை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் விஜயை சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்பு சென்னையில் உள்ள விஜயின் இல்லத்தில் நடைபெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.