LOADING...
திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்
ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்

திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2025
01:54 pm

செய்தி முன்னோட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். "முன்பு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஏன் திமுகவை 'தீய சக்தி' என்று சொன்னார்கள் என்று நான் இப்போது உணர்கிறேன். அதையே நானும் வழிமொழிகிறேன், திமுக ஒரு தீய சக்தி. அதற்கு நேர்மாறாக, தமிழக வெற்றிக் கழகம் ஒரு தூய சக்தி," என்று விஜய் முழங்கினார். ஈரோடு தந்தை பெரியார் பிறந்த மண் என்பதை நினைவு கூர்ந்த விஜய், "பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு சிலர் கொள்ளையடிக்கிறார்கள். பெரியார் பெயரால் நடக்கும் இந்த போலி அரசியலைத் தவெக முறியடிக்கும்," என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஈரோடு 

விவசாயிகளின் நலனுக்காக விஜய் ஆதரவு

ஈரோட்டின் அடையாளமான மஞ்சள் விவசாயத்திற்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை என்றும், நீர் மேலாண்மையில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறினார். தனது பேச்சு சினிமா வசனம் போன்றது என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நான் சினிமாத்தனமான அரசியல் செய்யவில்லை; மக்கள் மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்," என்றார். முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது கட்சிக்குப் பெரும் பலம் என்றும், வரும் காலங்களில் இன்னும் பல முக்கியத் தலைவர்கள் இணைவார்கள் என்றும் சூசகமாகத் தெரிவித்தார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement