Loading...
டெல்லி போராட்ட எதிரொலி: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை
நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை

டெல்லி போராட்ட எதிரொலி: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வில்(NEET) உள்ள முறைகேடுகளை எதிர்ப்பது மட்டுமே தங்கள் நோக்கமல்ல, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவக் கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் சூழலில், நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் பிரதமர் இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்தது. இந்த செயலை கண்டித்து நேற்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள TVK அறிக்கை வெளியிட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

"கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்"

"தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வைச் சீர்திருத்துவதை விட, அதை முற்றிலும் ஒழிப்பதே நிரந்தர தீர்வாகும். அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்".

"கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் சட்டரீதியான அல்லது நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், இடைக்கால ஏற்பாடாக ஒரு 'சிறப்புப் பொதுப் பட்டியலை' உருவாக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்வி கொள்கைகளில் மாநில அரசுகள் முழு அதிகாரம் செலுத்த முடியும்".

"இதுவே நிரந்தர மற்றும் இடைக்காலத் தீர்வுகளுக்கான எங்களது பார்வை. வெற்றி தலைவரான (முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்) இதை ஏற்கனவே தெளிவாக வலியுறுத்தியுள்ளார்" என அதை அறிக்கை கூறியது.

ADVERTISEMENT

சாடல்

எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி

பிரதான எதிர்க்கட்சியான திமுகவை மறைமுகமாக சுட்டிக்காட்டிய TVK, "நாங்களே நீட் தேர்வை ரத்து செய்வோம் எனப் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் TVK ஒருபோதும் ஈடுபடாது" என்று சாடியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மற்றவர்களின் உழைப்பு, கருத்துக்கள் மற்றும் போராட்டங்களுக்குத் "தங்கள் சொந்த லேபிளை ஒட்டிக் கொள்ளும்" சுயநல அரசியலை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் TVK கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT