LOADING...
கரூர் விபத்து வழக்கு: டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம்
சிபிஐ தலைமையகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம்

கரூர் விபத்து வழக்கு: டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்த விசாரணையை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ மேற்கொண்டு வருகிறது. சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, கூட்ட நெரிசலுக்குத் தனது கட்சியோ அல்லது நிர்வாகிகளோ பொறுப்பல்ல என்று விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கம்

CBI விசாரணையில் தனது கட்சியினருக்கும் இதற்கும் தொடர்பில்லை என விஜய் வாக்குமூலம்

தனது வருகையின் போது ஏற்பட்ட அதீத கூட்டத்தைக் கண்டு, அங்கே தொடர்ந்து இருந்தால் அது மேலும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தும் என கருதியதாலேயே தான் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறியதாக அவர் விளக்கியுள்ளார். ஏற்கனவே தவெக நிர்வாகிகள் அளித்த வாக்குமூலங்களும் இதையே உறுதிப்படுத்துவதாக உள்ளன. மறுபுறம், விஜய்யின் வருகையில் ஏற்பட்ட தாமதமே கூட்ட நெரிசலுக்குக் காரணம் எனத் தமிழகக் காவல்துறை முன்வைத்த வாதங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குழு

CBI விசாரணையை மேற்பார்வையிட குழு அமைப்பு

விஜய்யின் வருகையை முன்னிட்டு டெல்லி சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அரசியல் தலையீடுகளின்றி நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Advertisement