LOADING...
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனம் 2025-26: தேதிகள், விதிகள் மற்றும் டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்

திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனம் 2025-26: தேதிகள், விதிகள் மற்றும் டிக்கெட் முன்பதிவு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
05:46 pm

செய்தி முன்னோட்டம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. இந்த நாட்களில், கோவிலுக்குள் உள்ள வைகுண்ட வாசல் அல்லது சொர்க்க வாசல் பக்தர்களுக்காகத் திறக்கப்படும். இந்த வாசல் வழியாகச் செல்வது மோட்சத்திற்கான வழியைத் திறக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

முன்பதிவு

தரிசன ஏற்பாடுகள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கத் தயாராகி வரும் நிலையில், தரிசனம் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற டிக்கெட் முன்பதிவு மற்றும் கூட்ட நிர்வாகத்தில் TTD முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தரிசன தேதிகள்: டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் திறந்திருக்கும். சர்வ தரிசனம் (பொது): ஜனவரி 2 முதல் 8 வரை சாதாரண பக்தர்களுக்காக டோக்கன்கள் இல்லாமல் சர்வ தரிசனம் அனுமதிக்கப்படும். ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் (SED): ஜனவரி 2 முதல் 8 வரை ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு

உள்ளூர் மற்றும் நன்கொடையாளர் ஒதுக்கீடு

ஸ்ரீவாணி தரிசனம்: ஜனவரி 2 முதல் 8 வரை ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பதி, சந்திரகிரி, ரேணிகுண்டா மற்றும் திருமலையைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்காக ஜனவரி 6 முதல் 8 வரை சிறப்பு ஒதுக்கீட்டில் (ஒரு நாளைக்கு 4,500 டோக்கன்கள்) டிக்கெட்டுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும். நன்கொடையாளர்கள் (ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல்) டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை TTD அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Advertisement