பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி
செய்தி முன்னோட்டம்
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை அனுமதித்து எவ்வித புகாரும் வராத வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணிபுரியவேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
விரைவு போக்குவரத்து பஸ்களில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிக்கு 75% கட்டண சலுகை அரசிடம் இருந்து வழங்கப்படுகிறது.
சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்து, படுக்கை வசதியுடைய பேருந்துகளுக்கும் இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை அனுமதிப்பதில்லை எனவும், இருக்கை வழங்கப்படாமல் தாமதிக்கப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
தமிழக போக்குவரத்துறை
மாற்றுத்திறனாளிகளை பணிவுடன் நடத்த வேண்டும் - போக்குவரத்துறை நடவடிக்கை
இதுமட்டுமின்றி மாற்றுத் திறனாளிக்கும் போக்குவரத்து டிரைவர் மற்றும் நடத்துனர்களிடம் தேவையற்ற பிரச்சினை வாக்குவாதமும் எழுந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
அவர்களிடம் அன்பாகவும், பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அறிவுறித்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காணவேண்டும் எனக்கூறியுள்ளனர்.
இனி வரும் காலங்களில் ஏசி பேருந்துகள் தவிர்த்து, மற்ற பேருந்துகளில் மாற்று திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.