
பொங்கல் பண்டிகையையொட்டி ட்ரெயின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
அடுத்தாண்டு வரவுள்ள பொங்கல் விழாவிற்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படியே, 2024-ஆம் ஆண்டின் 3 நாட்கள் பொங்கல் திருவிழாவிற்காக டிக்கெட்டுகள் விற்பனை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது வழக்கம்.
அதன்படி, இன்று முன்பதிவு செய்வோர், ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க, நாளை முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 13 -ஆம் தேதி பயணிக்க விரும்புவார்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம்.
ட்விட்டர் அஞ்சல்
டிக்கெட்டுகள் முன்பதிவு
#Watch | "அதிகாலை 5.30 மணிக்கே வந்ததால டிக்கெட் கிடச்சது"
— Sun News (@sunnewstamil) September 13, 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்ல விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!#SunNews | #TrainTicket | #Pongal2024 pic.twitter.com/yuuVJ1s8tj