இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை
அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின்(FBI) சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடா, இன்று(ஏப் 18) தேசிய தலைநகர் புது டெல்லிக்கு வந்தார். இந்திய சட்ட அமலாக்கத்துடன் FBIயின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். "FBIயின் சர்வதேச செயல்பாடுகளின் உதவி இயக்குனர் ரேமண்ட் டுடாவை புதுடெல்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது வருகையின் போது, AD டுடா இந்தியாவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் FBIயின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவார். சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை." என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி
கடந்த பிப்ரவரியில் FBIயின் உதவி இயக்குநராக டுடா பொறுப்பேற்றார். FBI வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் மற்றொரு நிறுவனத்தில் உதவி-இயக்குனராக இதற்கு முன் பணியாற்றியுள்ளார். டுடாவின் வருகையை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வரவேற்றார். கார்செட்டி புதிதாக இந்தியாவுக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மார்ச் 15 அன்று அமெரிக்க செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, கார்செட்டி 52க்கு 42 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாகும்.