
தக்காளி விலை மீண்டும் உயர்வு; கிலோ ரூ.140 க்கு விற்பனை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வரும் தக்காளிவிலை, நேற்று ஒரு இரவில் கிலோவிற்கு ரூ.30 அதிகரித்துள்ளது.
தங்கத்தை போலவே தக்காளியின் விலையும் உச்சத்தில் உள்ளது. அதிகரித்துள்ள பருவமழை, குறைந்த வரத்து போன்ற காரணங்களால் நாடு முழுவதும் தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எறியுள்ளது.
மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்க, மாநில அரசு, நியாயவிலை கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளியை விற்க ஏற்பாடு செய்தது.
இருப்பினும், சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.110 விலைக்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ஒரு கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து உள்ளது.
சில்லரை விற்பனையிலோ, இன்னும் விலை அதிகரித்து, கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தக்காளி விலை மீண்டும் உயர்வு
#JUSTIN கோயம்பேட்டில் தக்காளி ₹140க்கு விற்பனை#tomatoprice #koyambedu #Tomatopricehike #Chennai #News18TamilNadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/vvcHybXARa
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 27, 2023