சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தச் சேவை, இந்த ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்துகள் சென்னை (கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து பம்பைக்கு இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe), குளிர்சாதனப் பேருந்துகள் (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் (NSS) இயக்கப்படுகின்றன.
முன்பதிவு
டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
இதன் தொடர்ச்சியாக, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சபரிமலை தேவஸ்தானத்தின் அறிவிப்புப்படி, டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை இந்தச் சிறப்புப் பேருந்து சேவை இயக்கப்படாது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதியும் செய்து தரப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பயணிகள் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது மொபைல் ஆப்பில் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi |… pic.twitter.com/6f97jVyeTx
— ArasuBus (@arasubus) November 22, 2025