Loading...
TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
TNPSC Group 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
09:45 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV (குரூப் 4) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,574 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், வரித் தண்டர், வரி வசூலிப்போர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், வனக்காவலர் மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.

விவரங்கள்

முக்கிய தேதிகள் மற்றும் தேர்வு நேரம்

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 6 முதல் நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருமுறை பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

ADVERTISEMENT