Loading...
செப்டம்பரில் 21,000 மெகாவாட்டை தொட்ட மின் தேவை; மின் வாரியத்திற்கு நெருக்கடியால் தினமும் 1 மணி நேரம் மின் தடையா?
தமிழகத்தில் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது

செப்டம்பரில் 21,000 மெகாவாட்டை தொட்ட மின் தேவை; மின் வாரியத்திற்கு நெருக்கடியால் தினமும் 1 மணி நேரம் மின் தடையா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
07:27 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்திலும் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28 அன்று 21,211 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, ஜூலை 14 அன்று 21,724 மெகாவாட் என்ற புதிய சாதனையை எட்டியது. வழக்கமாக செப்டம்பரில் 2,500 முதல் 3,000 மெகாவாட் வரை மின் தேவை குறையும். ஆனால், இந்த ஆண்டு தொடர்ந்து 21,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதால் மின் வாரியத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மின் தடை

முன் அறிவிப்பின்றி தொடரும் மின் தடை

தினமலருக்கு இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுபடி, தமிழகத்தில் மின்வெட்டுகள் திட்டமிட்டுள்ளன.

அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட முடியாத சூழல் மற்றும் நிதியைக் கருத்தில் கொண்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க அதிகாரிகள் முயல்வதால், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினமும் ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மின்னகம் சேவை மையத்திற்கு இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்படுவதாகக் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT