பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு
இந்தியாவில் பல இடங்களில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது. அதில் பல உலகளவில் பிரபலமும் கூட. இந்நிலையில் பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்கம்(PATWA) அண்மையில் சர்வதேச பயண விருதினை தமிழகத்திற்கு அளித்துள்ளது. இன்டர்நேஷனல் ட்ராவல் போர்ஸ் 2023ன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறந்த இடத்திற்கான விருது வழங்கும் விழா ஜெர்மனியில் பெர்லின் நகரில் அண்மையில் நடைபெற்றது. நாடளவில் கே.ராமசந்திரன் சிறந்த சுற்றுலா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதம் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடந்த 3 நாள் சுற்றுலா வர்த்தக கண்காட்சியில், தமிழக மாநில சுற்றுலாத்துறை ஸ்டால் ஒன்றினை அமைத்
இயற்கை வளங்களின் மிகுதியை பெற்று விளங்கும் தமிழ்நாடு
அதில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்களை காட்சியகப்படுத்தியது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு வந்த பார்வையாளர்களுக்கு துண்டு பிரசுரங்களும், கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சுற்றுலா துறையின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக PATWA, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறந்த சுற்றுலா தளமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருதினை ஜமைக்கா சுற்றுதுறை அமைச்சரான எச்.இ.எட்மண்ட் பார்ட்லெட், சிறந்த சுற்றுலாத்துறை அமைச்சராக தேர்வான கே.ராமச்சந்திரனிடம் அளித்தார். இந்தியாவின் 29 மாநிலங்களில் தமிழ்நாடு 11வது பெரிய மாநிலமாகும். இது இயற்கை வளங்களின் மிகுதியை பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.