Page Loader
தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்
திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 19, 2024
07:58 am

செய்தி முன்னோட்டம்

இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது. 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலின் வாக்கு பதிவு, முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளில் தொடங்கியது. இன்று காலை முதல் வாக்கு சாவடிகளை நோக்கி மக்கள் செல்ல துவங்கி விட்டனர். இதில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் அடங்குவர். நடிகர் அஜித்குமார், காலை 7 மணிக்கே முதல் ஆளாக திருவான்மியூர் வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல, சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அஜித் வாக்குப்பதிவு

ட்விட்டர் அஞ்சல்

EPS வாக்குப்பதிவு

ட்விட்டர் அஞ்சல்

ப.சிதம்பரம் வாக்குப்பதிவு

ட்விட்டர் அஞ்சல்

தமிழிசை வாக்குப்பதிவு