Page Loader
புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்
மக்களுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன்.

புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்

எழுதியவர் Srinath r
Dec 05, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் தங்கியுள்ள 1,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் உணவு பொட்டலங்களை வழங்கினார். புயலால் பாதிப்படைந்து நிவாரண முகாம்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு, 8.45 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5,565 குடும்பங்களை சேர்ந்த 18,750 பேர், 411 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, 52,981 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5,87,280 உணவு பொட்டணங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,09,058 உணவு பொட்டணங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64,380 உணவு பொட்டணங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 91,983 உணவு பொட்டணங்களும் என 8,44,601 உணவு பட்டணங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

மக்களுக்கு வழங்கும் உணவை சுவைத்து பார்த்த அமைச்சர்