தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அரசாணை இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, சுற்றுலா துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் ஐஏஎஸ் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐஏஎஸ் சுற்றுலா துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு துறையின் கூடுதல் செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராகவும், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செந்தில் குமார் ஐஏஎஸ் சுற்றுச்சூழல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.