Page Loader
வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு 
வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு

வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு 

எழுதியவர் Nivetha P
Dec 13, 2023
09:27 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், இந்த 4 மாவட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரணத்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னையிலுள்ள அனைத்து வட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பத்தூர் வட்டம் 3 வருவாய் கிராமங்களுக்கும், குன்றத்தூர் வட்டம் முழுவதும் நிவாரண தொகை வழங்கப்படும்.

வுயல் 

நாளை(டிச.,14) முதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுவதுமாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் இத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த புயலால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 2 நாட்கள் வெள்ளத்தில் சிக்கி பொருட்களை இழந்தவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை நியாயவிலை கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அரசு, சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொதுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக்கணக்கு எண் விவரங்களோடு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நிவாரணம் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் நாளை(டிச.,14) முதல் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.