
அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று இதன் விலை ஒரு கிலோ 80 ரூபாய் என விற்கப்பட்டது.
பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளியின் வரத்து குறைத்ததாகவும், அதனால் விலையேற்றம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று தக்காளியின் விலை சரிந்து ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எனினும் மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது.
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காய்கறிகளின் விற்பனையை பசுமை சந்தையில் மீண்டும் துவங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
அதிகரிக்கும் தக்காளியின் விலை
#BREAKING | கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை#Tomato | #Koyambedu | #VegetableMarket pic.twitter.com/z05uA6mWnl
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 18, 2024