Page Loader
இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு
வாரந்தோறும் புதன் கிழமை அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்களை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2023
09:35 am

செய்தி முன்னோட்டம்

பொதுமக்கள் எளிதில் காவல்துறை உயர் அதிகாரிகளை அணுக ஏதுவாக, தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காவல்துறை உயர் அதிகாரிகளான, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட மாவட்ட எஸ்.பி.க்கள், வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாரந்தோறும் புதன் கிழமை காலை முதல் மாலை வரை கமிஷனர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று, அது தொடர்பான விசாரணை நடத்தபடவேண்டும் என அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அணுகுமிடத்தில் காவல்துறை உயரதிகாரிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக அரசு உத்தரவு