Page Loader
தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டம் 
நவம்பர் 1 அன்று விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டம்

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டம் 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 18, 2024
07:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழன்று, அக்டோபர் 31 அன்று வருகிறது. அதற்குப் பிறகு வெள்ளி நாள் அனைவருக்கும் பணிநாள். வெளி மாவட்டங்களில் பணியாற்றும் பலர், தங்கள் சொந்த ஊர்களுக்குப் சென்ற பிறகு, அடுத்த நாளே அலுவலகத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மறுநாள், நவம்பர் 1 அன்று விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், வியாழன் துவங்கி, நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதியையும் சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறையாக இருக்கும். சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாடி, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திரும்பலாம் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே, வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post