இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா
தற்போதுள்ள சூழலில் நாளுக்குநாள் சுற்றுசூழல் பாதிப்படைந்து வரும் நிலையில், இயற்கையினை பாதுகாக்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தன்னார்வலர்கள் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு அரசு, இங்கிலாந்து அரசுடன் இணைந்து சென்னை, செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. லண்டன் நாட்டில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தினை கொண்டு இந்த தாவரவியல் பூங்கா ஈரநிலங்கள், அலையாத்தி காடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
சுற்றுசூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் புதிய திட்டங்கள் துவக்கம்
தமிழகத்தின் பூர்வீக அரிய வகையினை சேர்ந்த தாவர இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த பூங்கா அமைப்பதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், இங்கிலாந்து நாட்டின் சுற்றுசூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறையின் அமைச்சர் தெரஸ் கோபே உள்ளிட்டோர் முன்னிலையில், தமிழக சுற்றுசூழல் காலநிலை மாற்றம்,&வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, கியூ கார்டன் இயக்குனரான ரிச்சர்ட் டேவேரெல் ஆகியோர் இடையே கையெழுத்தானது. சென்னையில் நடைபெறும் ஜி 20 சுற்றுசூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் இது போன்று பல முக்கிய திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.