
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. பருவக்காலத்தையும் தாண்டி பல மாநிலங்களில் வெப்ப சலனம் தொடர்ந்தது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழக அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
அதோடு மாவட்டம்தோறும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ORS கரைசல் வழங்க, பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கத்தின்போது, அங்கங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் இந்த பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு!
— Sun News (@sunnewstamil) October 28, 2024
வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.… pic.twitter.com/BSYLH1HFji