LOADING...
விஜய் பதவியேற்பதில் தொடரும் சிக்கல்; இன்னும் VCK, IUML ஆதரவு கடிதம் இன்னும் வரவில்லை, ஆளுநர் அழைக்கவில்லை
விஜய் பதவியேற்பதில் தொடரும் சிக்கல்

விஜய் பதவியேற்பதில் தொடரும் சிக்கல்; இன்னும் VCK, IUML ஆதரவு கடிதம் இன்னும் வரவில்லை, ஆளுநர் அழைக்கவில்லை

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2026
09:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறி முடிவுக்கு வந்துள்ளது என தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. VCK மற்றும் IUML ஆதரவு அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அவர்களின் ஆதரவு கடிதம் கைக்கு கிடைக்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் விஜய் முதல்வராக நாளை பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரை விஜய்க்கு 116 MLA க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது எனவும் அந்த செய்தி கூறுகிறது.

VCK ஆதரவு

VCK மின்னஞ்சல் மூலம் ஆதரவு கடிதத்தை அனுப்பியுள்ளது

இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் VCK தனது ஆதரவு கடித்தை மின்னஞ்சல் மூலமாக TVK விற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு MLA க்கள் எண்ணிக்கை அதிகரித்து 118 என வருகிறது. அதே நேரத்தில் IUML விஜய்யின் TVKவிற்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் VCKவின் வன்னியரசு 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என ட்வீட் செய்துள்ளார். இது சூசகமாக தெரிவிக்கப்பட்டதா அல்லது TVKக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என யோசிக்க வைக்கிறது. இதனால் விஜய் பதவியேற்பதற்கு இருக்கும் தடை நீங்கியதா? கவர்னர் அழைப்பாரா?

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement