தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம்தேதி முதல் 2,811 மின்பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. இதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15ம்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி 2.67கோடி மின் இணைப்பில் தற்போது வரை 90.69சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 9.31சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே இந்த ஆதார் எண் இணைப்பிற்காக வழங்கிய https://nsc.tnebltd.gov.in/adharupload/என்னும் இணையத்தளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாகவும், ஆதாரை இணைத்த பின்னரும் இணைக்கவில்லை என்ற தவறான தகவல் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பல குழப்பங்கள் இடையில் அமைச்சரின் அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்
இந்நிலையில், பலரும் இணைக்காத நிலையில் அமைச்சரின் மேற்கூறப்பட்ட அறிவிப்பு மின்நுகர்வோர் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், இணைத்த பின்னரும் இணைக்கவில்லை என வரும் குறுந்தகவல் குறித்து கேட்டால் மின் அலுவலகத்திற்கு நேரில்வந்து பதிவுசெய்தால் பிரச்சனை இருக்காது என்று கூறுகிறார்கள். ஆனால் முகாம்களுக்கு சென்று இணைத்தோருக்கும் இதே தகவல்தான் வருகிறது என்று மின் நுகர்வோர் கூறுகிறார்கள். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், சர்வர் பழுதாகியிருக்கும்போது இணைப்பு செய்தால் இணைத்துவிட்டதாக கூறப்படும், சர்வர் சரியான பின்னர் இணைக்கவில்லை என்று தகவல் வந்திருக்கும். இந்தப்பிரச்சனை தொடர்ந்துகொண்டு தான் உள்ளது என்று கூறினார். எனினும் தற்போது எளிதாக பதிவுசெய்ய முடிகிறது. இணைப்பு செய்யாதோர் வீடுகளுக்கு சென்று ஊழியர்கள் இணைத்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.