NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
    இந்தியா

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
    எழுதியவர் Nivetha P
    Feb 01, 2023, 01:43 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
    மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று கூறப்பட்டு, பின்னர் ஜனவரி 31ம் தேதி என்று மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இறுதி வாய்ப்பாக கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

    இதுகுறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கி 78நாட்கள் ஆகியுள்ளது. 2.67 கோடி மின் இணைப்பில் தற்போது வரை 2.42கோடி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது, 90.69சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 9.31சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து, மீதமுள்ள 9.31சதவீத மின்நுகர்வோரும் வரும் 15ம்தேதிக்குள் இணைப்பினை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாய்ப்பாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இனி மின்வாரியம் சார்பில் கால அவகாசம் என்பது அளிக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    தமிழக அரசு

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023