LOADING...
தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி: குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி: குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (மே 25) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீரற்ற காலநிலை மற்றும் சாகுபடி செலவு அதிகரிப்பால் தவிக்கும் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டிகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அரசாங்க நிதி ஒதுக்கீடு

தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்

தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இந்த பயிர்க்கடன் தள்ளுபடி உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். கடந்த 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் நேரடியாகப் பயனடைய உள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி செயல்படவுள்ள இந்தத் திட்டத்தால், தமிழக அரசுக்குக் கூடுதலாக 2,044.46 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர விவசாயிகளுக்கான சலுகை

பெரு விவசாயிகளுக்கான சலுகை மற்றும் புதிய பயிர்க்கடன் பெறுவதற்கான வழிவகை

இந்தத் திட்டத்தின் கீழ் குறு விவசாயிகள் மட்டுமின்றி, ரூ.50,000 வரை கடன் பெற்றுள்ள சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள், அடுத்து வரவிருக்கும் காரீப் மற்றும் ரபி பருவ சாகுபடிகளுக்கு எவ்வித தடையுமின்றி புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement