LOADING...
வாரத்தின் முதல் நாள் தங்க விலையில் மாற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
வாரத்தின் முதல் நாள் தங்க விலையில் மாற்றம்

வாரத்தின் முதல் நாள் தங்க விலையில் மாற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 25, 2026
11:07 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், திங்கள்கிழமை (மே 25) தங்க விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹14,780 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹1,18,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 அதிகரித்து ₹16,124 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 அதிகரித்து ₹1,28,992 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹12,400 ஆகவும், ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹99,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹295 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிகும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement