Page Loader
முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை 
முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளு காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இந்த வைரஸ் காய்ச்சலுக்கான மருத்துவ சிகிச்சையோடு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் (Madras ENT Research Foundation - MERF) தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன". "இந்நிலையில், அவருக்கு வைரல் ஃப்ளூ (viral flu) காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதல்வர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Embed

மருத்துவ அறிக்கை

pic.twitter.com/PYDtPy7fuM— M.K.Stalin (@mkstalin) November 4, 2023