
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
இன்றைய 78வது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோல, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தியாகிகளின் குடும்பங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் ஒய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும் - முதல்வர்#CMMKSTALIN | #TNDIPR | #IndependenceDay2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/RsKPHrU0SD
— TN DIPR (@TNDIPRNEWS) August 15, 2024