
திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு சார்பில் நடத்தப்படும் வேளாண் சங்கம திருவிழாவை, இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி, சென்னையிலும் வேளாண் விழாவை துவங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகதான், தற்போது திருச்சியில் இந்த திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர்.
இந்த சங்கமம் மூலம் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.
3நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான இன்று, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்.
ட்விட்டர் அஞ்சல்
வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
#JUSTIN || உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
— Thanthi TV (@ThanthiTV) July 27, 2023
பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது#cmstalin | #trichy pic.twitter.com/Ujt3Xa5BOU