LOADING...
தேர்தல் 2026: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் திமுக?
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது DMK (pc: File Photo)

தேர்தல் 2026: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் திமுக?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
01:20 pm

செய்தி முன்னோட்டம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தக்கவைத்து கொள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முறை புதிய கட்சிகளின் வருகையாலும், தற்போதைய கூட்டணி கட்சிகளின் கூடுதல் எதிர்பார்ப்புகளாலும் திமுக தனது சொந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டது (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் 188). ஆனால், இந்த முறை புதிய வரவுகளான தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதால், திமுக நேரடியாக 165 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நிலைப்பாடு

கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு

காங்கிரஸ் கட்சி இந்த முறை, 28 + 1 ராஜ்யசபா இடம் கோருகிறது. அதோடு, ஆட்சியில் பங்கு கோரிய நிலையில், எண்ணிக்கையை தக்கவைக்க முயற்சிக்கிறது. விசிகவிற்கோ, 6 அல்லது 7 + 1 ராஜ்யசபா இடம் என்பது கோரிக்கை. இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மதிமுக, 3 (தனிச் சின்னமாக இருப்பின்) அல்லது 5 (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால்) என பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. கமலின் MNM கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 இடங்களும், IUML-க்கு, 3 இடங்களும் ஒதுக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய வரவு

புதிய வரவுகளும், திமுகவின் வியூகமும்

தேமுதிக, தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் SDPI போன்ற புதிய கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பதால், பழைய கூட்டணிக் கட்சிகள் சில இடங்களை "தியாகம்" செய்ய வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, சவாலான தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான திமுகவின் உயர்மட்டக் குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Advertisement