LOADING...
திருப்பதி போறீங்களா? மார்ச் 3 ஆம் தேதி கோயில் 10 மணி நேரம் நடை அடைப்பு
மார்ச் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும்

திருப்பதி போறீங்களா? மார்ச் 3 ஆம் தேதி கோயில் 10 மணி நேரம் நடை அடைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
09:07 am

செய்தி முன்னோட்டம்

வரும் மார்ச் 3 அன்று நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 10 மணி நேரம் அடைக்கப்பட உள்ளதாக TTD அறிவித்துள்ளது. மார்ச் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதியம் சந்திர கிரகணம் நிகழ்வதால், ஆகம விதிகளின்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கமாகும். அன்றைய தினம் வழங்கப்பட வேண்டிய ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் தர்ம தரிசனம் (Sarva Darshan) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேண்டுகோள்

பக்தர்களுக்கு TTD வேண்டுகோள்

கோயில் நடை அடைக்கப்பட்டுள்ள நேரத்தில் அன்னப்பிரசாத விநியோகமும் நிறுத்தப்படும். இரவு 7:30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, புண்ணியாவதனம் மற்றும் சுத்தி (சுத்தப்படுத்தும் சடங்குகள்) செய்யப்படும். அதன் பின்னரே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கிரகண நேரத்தைக் கணக்கில் கொண்டு பக்தர்கள் தங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. மார்ச் 3-ம் தேதி திருமலைக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement